அன்று ஞாயிறு கிழமை இயற்பியல் டியூஷன் செல்வதற்காக காத்திருந்தேன், தாத்தாவும் அங்கு இருந்தார். பேருந்தில் ஏறியதும் காலியாக இருந்த இருக்கையில் நானும் அவரும் அடுத்து அடுத்து அமர்ந்தோம்.
எனது புத்தகத்தை பார்த்து பிளஸ் டூ படிக்ரியா என்றார்.
ஆமா தாத்தா, நீங்க எங்க ஏரியாக்கு புதுசா என்றேன்?
"ஆமாம் புதுசாக குடி வந்திருக்கிறோம்" தான் முன் பிருந்த வீட்டில் வாடகை அதிகமானதால் மாறிவிட்டார்கள் என்றார்.
எனது சொந்த ஊர் மதுரை, retirementக்கு அப்புரம் இப்போ இங்க டோல்கேட்ல இருக்ர paint company la work panren என்றார்.
மதுரை ல என்ன வேலை செஞ்சிங்க என்றேன்.
"அரசு பேருந்து பணிமனையில் வேலை பார்த்தேன்"என்று சொல்லி நிறுத்தாமல் தொடர்ந்தார்," அப்பொதல்லாம் நாங்கள் பேருந்தில் அடியில் magnet ஒன்றை ஃபிக்ஸ் செய்து வாரம் ஒரு முறை சாலையில் ஒட்டி செல்வோம், ஆணி போன்ற இரும்பு பொருட்கள் அதில் ஒட்டி கொழும் அதை எடைக்கி போட்டு அருகில் உள்ள அனாதை இல்லத்தில் கொடுத்து விடுவோம்...நீ இயற்பியல் book வைத்திருப்பதால் இதை சொனேன்" என்று சொல்லி மெலிதாய் சிரித்தார்.
நல்ல அரசு வேலை செஞ்சிருகிங்க இப்போ ஏன் retirement Ku அப்ரம் இந்த paint company la வேலை செய்ரிங்கனு கேட்டேன்.
எனக்கு ஒரு பையன் என்று ஆரம்பித்தார்...அடடா பையன் கவனிகல விசு பட கதை போல nu மனதுக்குள் நினைத்தேன்.
தொண்டையை சரிசெய்து கொண்டு தொடர்ந்தார்"என் பையன் படிப்பில் பயங்கர சுட்டி, அவன் சிறப்பாக படித்து ஐஐடி சீட் கிடைத்தது. அவனது கிளாஸில் அவனை எல்லாரும் maths tiger from South India என்று அழைப்பார்கள் அவனுக்கு maths um physics um மிகவும் பிடித்த பாடங்கள். அவன் ராகுல் காந்தி செட். கல்லூரி முடித்த கையோடு அவனுக்கு அமெரிக்கா வில் மேல் படிப்பு படிப்பதற்காக அழைப்பு வந்தது. கல்லூரி நண்பர்களோடு கடைசியாக ஒரு முறை கோவா சென்று வரென் என்று சொல்லி சென்றான் அங்கு அலை அடித்து பாறையில் விழுந்து அவன் பின் மண்டையில் பலமான அடிபட்டது
6 மாதம் சுய நினைவின்றி இருந்தான் .பிறகு மெல்ல மெல்ல அவனுக்கு குணமானது .இருந்தாலும் அவனால் முன் போல் கணிதம் பொட இயவில்லை. பேச்சும் சரியாக வருவதில்லை. அவனுக்கு வைத்தியம் பார்த்து இருந்த பணம் எல்லாம் செலவானது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் முழுதாக குணமாக வில்லை. என்றார் கனத்த குரலில்.
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம். Conductor nan இறங்கும் இடத்தை சொல்லி விசில் அடித்தார்.
வேறு ஏதும் சொல்லாமல் தாத்தா நான் இறங்கனம் என்று சொல்லி எழுந்த்ந்தேன்.
சரி என்று கூறி வழி விட்டுத் தூரத்தில் இருந்த எதையோ உற்று நோக்கி சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதற்கு பிறகு தாத்தா வை சில முறை பார்த்திருக்கிறேன் பேச வில்லை.
கல்லூரிக்கு வெற ஊருக்கு சென்றதில் எங்கோ தொலைந்து போனார் அந்த தாத்தா பிறகு கண்ணில் பட வே இல்லை.
சம்பிதில் ஜெயகாந்தன் அவர்களின் உரை ஒன்றை பார்த்தேன்...ஏனோ அவரை உருவத்தில் ஒத்து இருந்த தாத்தா மனதிற்குள் வந்தார் .... சில நேரங்களில் சில மனிதர்கள்.