DNA
நேரம்: காலை 6
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த நகரத்தின் புறநகரில் இருந்தது அந்த
லேப். ஐம்பது வயதுக்கும் மேலான அந்த பேராசியர், தனது கணினியில் எதையோ கவனத்துடன்
படித்து கொண்டிருந்தார். அது ஒரு DNAவை பற்றிய ஏதோ ஒரு தொகுப்பு. அதை படித்து
முடித்த பின் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. தன் கண்டுபிடிப்பு உலகில்
ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்த போகிறது என்பதின் அறிகுறியாய் அது வெளிப்பட்டது.
ஆம்! பேராசியர் மணிகண்டன் கண்டுபிடித்து அத்தகைய சாதனையே, அவர் கண்டுபிடித்து
இது தான், விதி என்பது வேறு ஒன்றும் இல்லை அது உனது DNA தான். எல்லாம் விதி படி
அதாவது உனது DNA வின் படி தான் நடக்கும். உன் பிறப்பில் இருந்து இறப்பு வரை
எல்லாமே உனது DNA வில் ஏற்கனவே பதிவாகி இருகின்றது. நீ தீர்மானிக்கும் ஒவ்வொன்றும்
ஏற்கனவே தீர்மானிக்க பட்டுவிட்டன. நீ வெறும் கருவியே, கருவில் பதிவான பதிவுகளை
செயல்முறை படுத்தும் கருவி.
மணிகண்டன் அந்த பதிவுகளை படிக்கும் அறிவியலை கண்டறிந்து விட்டார், இது
நிருபிக்க பட்டாள் குற்றவாளிகளை பிடிப்பது மிக சுலபகாமி விடும்.
தன் கண்டுபிடிப்பை தனுக்கு உதவியாய் இருக்கும் மாணவனை தவிர வேற யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை அவருக்கு. கனவு உலகத்தில் வாழ்பவர் என்று உலகத்தால் கை விட பட்டவர் அவர். ஆனால் அறிவியலில் மிகுந்த ஈடுபாடுடைய மாணவன் ராம் மட்டும் இவரின் தனித்துவத்தை அறிந்திருதான். அதனால் இவருடன் பணிபுரிவது அவனுக்கு இயல்பாகவே பிடித்திருந்தது.
தன் கண்டுபிடிப்பை தனுக்கு உதவியாய் இருக்கும் மாணவனை தவிர வேற யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை அவருக்கு. கனவு உலகத்தில் வாழ்பவர் என்று உலகத்தால் கை விட பட்டவர் அவர். ஆனால் அறிவியலில் மிகுந்த ஈடுபாடுடைய மாணவன் ராம் மட்டும் இவரின் தனித்துவத்தை அறிந்திருதான். அதனால் இவருடன் பணிபுரிவது அவனுக்கு இயல்பாகவே பிடித்திருந்தது.
முதலாவதாக தனது நகத்தில் இருக்கும் DNAவை படிக்கச் முற்பட்டார் மணிகண்டன்,
அவரது கண்டுபிடிப்புக்குள் வைத்தார்
சிறிது நேரத்தில் ஒரு புதிய புதினம்(novel) போல் தனது கணினியில்தெரிந்தது
அவரது வாழ்கை. அதை படித்தார் தான் கடந்து வந்த பாதையை அப்படியே பளிச்சிட்டது அது.
எதையோ தேடியவர் தனது இறப்பு தினத்தை தேட கடைசி பக்கம் போனார். ஏனோ மனம்
விரும்பாமல் அதை அப்படியே மூடினார்.
தனது மாணவனுக்கு செல்பேசியில் அழைத்து தனது வெற்றியையும் கூடவே அவன் நன்கு
அறிந்த மனிதர்கள் நான்கு பேரின் முடியை ஆய்வுக்காக எடுத்து வர சொன்னார்.
மதியம்: 12
மாணவன் கொண்டு வந்த முடியை சோதித்து அவர்கள் வாழ்விற்கும் DNAவில் தோன்றும்
பதிவிற்கும் உள்ள ஒற்றுமையை அறிந்தார். பின் அவர்கள் இன்று என்ன செய்யபோகிறார்கள்
என்பதை அந்த பதிவில் சொல்ல பட்டதை போல
நடகின்றதா என்று தன் மாணவனுடன் சென்று பார்த்தார். அதில் உள்ள அனைத்தும் சிறு பிழை
இன்றி நடந்தது.பேராசிரியருக்கும் மாணவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி, ஆயினும் இதை
இன்னும் உறுதி படுத்தி கொள்ள விரும்பினர்.
பேராசியரின் சொல் படி அருகில் உள்ள முடிதிருத்தகம் சென்று யாரோ பத்து பேருடைய
முடியை ௭டுத்து வர சென்றான் ராம். பத்து முடியும் வெவ்வேறு மனிதர்களுடையது என்பதை
உறுதி செய்து கொண்டு கிளம்பினான். அப்பொழுது அவனுடைய முடி ஒன்று அவன் அறியாமல்
அதற்குள் விழுந்தது.
மாலை: 6
ராம் கொண்டு வந்த அனைத்தையும் சோதிப்பதற்காக ஒவ்வொன்றாக எடுத்து அந்த
கண்டுபிடிப்பில் வைத்தார். சிறிது நேரத்தில் ஒவ்வொன்றும் புதிய புதினம் போல்
தெரிந்தது கணினி திரையில். பிறகு ஒவ்வொன்றாக படிக்கச் ஆரம்பித்தார். எல்லாம் சாதாரண
மனிதர்கள் வாழ்கையில் நடக்கும் காதல், கோவம், ஏமாற்றம், அப்படியாக எதையோ
கொண்டிருந்தது...எல்லாருடைய வாழ்கையிலும் நிகழ் காலமான இன்று என்ன செய்ய
போகிறார்கள் என்பதை தேடி கொண்டிருந்தார் பேராசிரியர். அவர் படித்த முதல் நான்கு மனிதர்களின்
DNAவும் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் அன்றாடம் மனிதர்கள் வாழ்வில் நடக்கும்
சம்பவமாகவே இருந்தன.
ஆய்வின ஐந்தாவது நபரை படிக்கச் ஆரம்பித்தார் பெரிய அந்த புதினத்தில், எப்படியோ
அன்றைய தினத்தின் பக்கத்தை கண்டறிந்தார். எல்லாரும் போல இதுவும் ஒன்று என்று
சலிபுடுன் படித்து கொண்டிருந்தவரை திடீர் என சில வார்த்தைகள் திடுக்கிட வைத்தன.
சுதாரித்து கொண்டு மறுபடியும் அதை கவனத்துடன் படிக்கச் ஆரம்பித்தார்...
“இவன் பெரிய திட்டம் ஒன்று உடையவன், இன்று 29/01/2013 அன்று மாலை 7 மணிக்கு
DNA வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கும் பேராசியர் ஒருவரை கொலை செய்வான்” என்று
இருந்தது.
திடுக்கிட்ட பேராசியரின் கை இடறி கணினியில் அவரின் வாழ்கை பதிவு திறந்தது. தன்
முடிவை அறிய இறுதி பக்கத்திற்கு சென்றுவிட்டு, படிக்கும் முன் கடிகாரத்தை பார்த்தார்
நேரம் 06:59ஐ காட்டியது. ஏதோ சத்தம்
கேட்டு பதற்றத்துடன் திரும்பிய பேராசிரியரின் நெத்தியில் பாய்ந்தது குண்டு.
கணினியில் தெறித்த உதிரம் வைத்தது அவரது வாழ்கையின் இறுதி பக்கத்தில் முற்று
புள்ளி.