நடு நிசி நாய்
“இப்பலாம் நைட்ல சரியா தூக்கம் வர மாட்டேனுது டா; எதுலயும் பெருசா இன்டிரஸ்டும்
இருக்க மாடேனுது” என்று தனது ஆபிசில் வேலை செய்யும் நண்பன் சுரேஷிடம் புலம்பினான்
கார்த்திக்.
கார்த்திக் தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்து வேலை செய்து கொண்டிருக்கும் என்ஜினியர். நண்பர்களுடன் தங்கினால் தனக்கு பிரைவசி இருக்காது என்பதால் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருந்தான். ஊரில் இருந்த கார்த்திக் தனது அண்ணனின் கல்யாணத்துக்கு பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்து 2 வருடம் ஆகிறது. வேலை கிடைத்த நாள் முதலாய் அவனது அம்மா அவனை கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டு கொண்டிருந்தாள். ஆனால் கார்த்திக் தனது அண்ணன் கல்யாணத்திற்க்கு பிறகு வாழும் வாழ்கையை பார்த்ததில் இருந்து கல்யாணத்தின் மேல் அவனுக்கு ஒரு வித பயம் உருவாயிற்று. மனைவி, குழந்தை, பால் பாக்கெட், சொந்தங்களின் தொல்லை இதலாம் பார்த்த போது, பொருப்புகள் பிடிக்காத கார்த்திக்கு, கல்யாணம் ஒரு சுதந்திரத்தை பறிக்கும் விஷயமாகேவே தெரிந்தது.
“வேற ஒன்னும் இல்ல கார்த்தி எல்லாம் ஸ்ட்ரெஸ், அதுவும் நீ தனியா வேற இருக்கல
அதான், பேசாம கல்யாணம் பண்ணிடு” என்றான் சுரேஷ்.
“வீட்ல அம்மா தொல்லை தாங்களனா நீ வேற ஏன்டா, வேற ஏதும் வழி இருந்தா சொல்லு”
“யு நீட் கம்பெனி, ஹ்ம்ம்
நீ ஏன் பெட் வளக்க கூடாது, இட் வில் ரீலிவ் யூவர் ஸ்ட்ரெஸ் டா... நாய் வள.. இட் வில்
ஷோ மோர் லவ்”
அப்படின்ற்ற.. சேரி என்ன நாய் டா வாங்கலாம்”
“PUG வாங்கு மச்சி። அதான் டா ஹட்ச் டாக்; அது ரொம்ப கியுட், ஃபரீன்ட்லியானது,
ரொம்ப பாசமா இருக்கும்.” என்று தனது நீண்ட நாள்
pug வளக்கும் ஆசையை கார்த்திக்கிடம் தினித்தான் சுரேஷ்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த வார இறுதியில் கார்த்திக்கும் சுரேஷும் சென்று நாய் வாங்கினர், ப்ருனோ
என்று பெயரிட்டனர்.
“என்னடா இந்த நாய்க்கு போய் ₹20,000 சொல்றாணுங்க”.
“இதுக்கெலாம் யோசிக்க கூடாது மச்சி, அது உன் ஸ்ட்ரெஸ்ஸ எவ்ளோ ரிலீவ் பன்னுதினு
பாருடா, ஸ்ட்ரெஸ்னால என்னன பிரச்சனைளாம், வரும் தெரியுமா...” என்று சுரேஷ் தனக்கு
தெரிந்த எல்லா மருத்துவ பிரச்சனையையும் சொன்னான்.
கார்த்திக் ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.
கார்த்திக் ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.
வாரம் 1:
சுரேஷின் செல்பேசி அலறியது.
“டே அது என்னடா சத்தம் போட்டுடே இருக்கு. பிஸ்கட், சாப்பாடு.. எதுவும் சாப்பட மாட்டேனுது” என்றான் கார்த்திக்
“கார்த்திக் அது குட்டி டா ஃபர்ஸ்ட் கொஞ்ச நாள் பால் தான்...ஒரு ஃபீடிங்
பாட்டிலும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்ட்டவும் வாங்கிக்கோ கொஞ்ச நாளிக்கி பால் காய்ச்சி ஊத்து“
“இது வேறயா ஹ்ம்ம் ”
“ஃபர்ஸ்ட் அப்படி தான் டா இருக்கும் ...அப்புறம் கொஞ்ச நாள்ள எல்லாம் செரி
ஆயிடும்” என்று கீதாசாரம் சொன்னான் சுரேஷ்.
கடந்த இரண்டு நாட்களாய் கார்த்திக்கின் செல்பேசி வழக்கத்துக்கு மாறாக அரை மணி நேரம் முன்பே அலாரம் அலற ஆரம்பித்தது.
பால் வாங்கி காய்ச்சி ஊற்றி விட்டு ஆபிஸுக்கு அவசரமாய் கிளம்பி கொண்டிருந்தான்
கார்த்திக். எப்போழுதும் போல் அவனது அறையில் இறைந்து கிடக்கும் சட்டையில் ஒன்றை
தேடினான். அதை அயன் செய்ய எடுத்த பொது அது ஈரமாக இருந்தது.
ஆபிஸில்....
“எனக்கும் நாய்க்கும் செட் ஆகாது டா” என்றான் கார்த்திக்.
“ஏன்டா? என்னாச்சு?” என்று அக்கறையுடன் கேட்டான் சுரேஷ்.
“அவசரமா கிளம்புரதுக்காக சட்டைய எடுத்தா அதுல நாய் அசிங்கம் பண்ணி
வச்சிருக்கு டா”
“நீ ஏன் மச்சி சட்டைய கண்ட இடத்துல போடுற”
“டே கடந்த 25 வருஷமா அப்படி தான்டா இருக்கேன்” என்று எகிறினான் கார்த்திக்.
“நாய காலையில வெளிய வாக்கிங் கூட்டிட்டு போடா, ஒரு மாசம் அப்படி பழகிட்டா
அப்புறம் அது வீட்டுகுள்ள அசிங்கம் பண்ணாது...உனக்கும் ஒரு exercise மாதிரி இருக்கும்.”
அடுத்த நாள் காலை ப்ருனோவை கூட்டிகொண்டு வாக்கிங் கிளம்பினான் கார்த்திக்.
அவன் தெருவில் அத்தனை நாய்கள் இருக்கின்றன என்பது அன்றைக்கு தான் அவனுக்கு
தெரிந்தது. அனைத்தும் அவனுடன் சென்ற ப்ருனோவை பார்த்து குலைத்தன, துரத்தின. தனது
வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாத ப்ருனோவை தூக்கி கொண்டு ஓடி வந்தான் கார்த்திக். அன்றைய
தினம் வாக்கிங் ரன்னிங்காய் மாறி இனிதே முடிந்தது.
அடுத்த நாள் கையில் கம்புடன் கிளம்பினான், ஏறக்குறைய எல்லா நாய் களையும் தன்
ஜென்ம எதிரியை போல் பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.
ஆபிஸில்....
“கார்த்தி இப்பலாம் உங்க எரியால அடிக்கடி திருட்டு போகுதுன்னு நியூஸ் பேப்பரில
வருது....ஜாக்கரதயா இரு டா” என்றான் சுரேஷ்
“என் கிட்ட தூக்கிட்டு போக என்ன இருக்கு ..”
“அதான் நாய் வளக்கிறியே...மச்சி።።።, அது ₹2௦௦௦0 ரூபாய் மறந்துட்டியா።።..நாய் திருடரதுக்குனே
தனி கும்பல் இருக்குடா...ஆமாம்... ஆபிசிக்கு வரும் பொது நாய எங்க விடுற?”
“அத சும்மா வரண்டால கட்டி போட்ருவேன்... இப்ப தான வாக்கிங் ஆரமிச்சிருகேன்.
கொஞ்ச நாளுக்கு ட்ரைன் ஆன அப்புறம் உள்ள கட்டி போடலாம்னு....பக்கத்து வீட்டு பசங்களும் விளையாடு வாங்க டா”
“என்னடா இப்படி சொல்ற...யாராவது அத தூக்கிட்டு போய்ட்டா ..”
அன்று முதல், எப்பொழுதும் சத்தமிடும் தனது ப்ருனோ கொஞ்ச நேரம் அமைதியாய்
இருந்தால் கூட வெளிய சென்று நாய் இருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.
நாய்க்கு காவல் இருந்தான்.
இரவில் பக்கத்து வீட்டு கேட்டை யாரேனும் திறந்தாலும் கூட, தூங்கி கொண்டிருந்த கார்த்திக் முழிக்கும் நிலைமை ஆயிற்று. ஒரு வாரதுக்கு பிறகு, இரைந்த துணிகளை அடுக்கி விட்டு ப்ருனோவை வீட்டுக்குள் கட்ட ஆரம்பித்தான்.
நாய்க்கு காவல் இருந்தான்.
இரவில் பக்கத்து வீட்டு கேட்டை யாரேனும் திறந்தாலும் கூட, தூங்கி கொண்டிருந்த கார்த்திக் முழிக்கும் நிலைமை ஆயிற்று. ஒரு வாரதுக்கு பிறகு, இரைந்த துணிகளை அடுக்கி விட்டு ப்ருனோவை வீட்டுக்குள் கட்ட ஆரம்பித்தான்.
ஆபிஸில்....
“நாய் வளக்கிறது ரொம்ப கஷ்டம் டா..” என்றான் கார்த்திக் சுரேஷிடம்.
“ஏன்டா இதுக்கே அழுத்துக்கிற....இன்னும் மாசம் மாசம் vaccination பண்ணணும்.இன்னும் எவ்ளவோ இருக்கு...” என்று வெறுப்பு ஏற்றும் விதமாக சொன்னான் சுரேஷ்.
“நீ சொன்னனு நாய் வாங்குன பாரு என்ன சொல்லணும்...பேசாம நாய வித்ரலாமுனு
இருக்கேன்”
“அந்த நாய் அவ்ளோ சீக்ரம் வேற யாருடையும் பழகாதே. அதுக்கு ஒரு மாஸ்டர் தான்
டா...”’
“இல்ல மச்சி செட் ஆகாது “
“என்னமோ போ.. அது அங்க போய் சாப்படாம சாக போது...சொல்றத சொல்லிட்டேன்..”
“வேற என்னடா பண்ண சொல்ற”
“பேசாம நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ፣ வர பொண்ணு உன்னையும் உன் நாய் போல பாத்துபா።።። ஐ மீன் நாயையும் உன்ன போல பாத்துபா” என்று எப்போழுதும் போல் குழப்பத்தில்
இருந்த கார்த்திகை கலாய்த்து விட்டு சீரியஸ் ஆக அறிவுரை கூறினான் சுரேஷ்.
மூன்று மாதத்திற்கு பிறகு...
“சுரேஷ்..என்ன சொன்னாலும் எதாவது சொல்லி சத்தம் போட்டுகிட்டே இருக்கா டா...என்ன
பண்றதுனே தெரில” என்று செல்பேசியில் புலம்பினான் கார்த்திக்.
“ஃபர்ஸ்ட் அப்படி தான் டா இருக்கும் ...அப்புறம் கொஞ்ச நாள்ள எல்லாம் செரி
ஆயிடும்” என்று சுரேஷ் சொல்வதை கேட்டுகொண்டிருந்த கார்த்திக்கின் காலை ப்ருனோ
நக்கி கொண்டிருந்தது.