Wednesday, 13 April 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்

பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிக்கு செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் பல முறை பார்த்திருக்கிறேன் அந்த தாத்தாவை. எங்கள் ஏரியாவுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் போலும். அதுவரை பெரிதாக பேசிகொண்டதில்லை ஆனாலும் இருவரும் பேருந்துக்காக காத்திருப்பில் பரிச்சயம்,  வழுக்கை தலை நரைத்த முடி கண்ணாடி அணிந்திருப்பார்.

 அன்று ஞாயிறு கிழமை இயற்பியல் டியூஷன் செல்வதற்காக காத்திருந்தேன், தாத்தாவும் அங்கு இருந்தார். பேருந்தில் ஏறியதும் காலியாக இருந்த இருக்கையில் நானும் அவரும் அடுத்து அடுத்து அமர்ந்தோம். 
எனது புத்தகத்தை பார்த்து பிளஸ் டூ படிக்ரியா என்றார்.
ஆமா தாத்தா, நீங்க எங்க ஏரியாக்கு புதுசா என்றேன்?
"ஆமாம் புதுசாக குடி வந்திருக்கிறோம்" தான் முன் பிருந்த வீட்டில் வாடகை அதிகமானதால் மாறிவிட்டார்கள் என்றார்.
எனது சொந்த ஊர் மதுரை, retirementக்கு அப்புரம் இப்போ இங்க டோல்கேட்ல இருக்ர paint company la work panren என்றார்.
மதுரை ல என்ன வேலை செஞ்சிங்க என்றேன். 
"அரசு பேருந்து பணிமனையில் வேலை பார்த்தேன்"என்று சொல்லி நிறுத்தாமல் தொடர்ந்தார்," அப்பொதல்லாம் நாங்கள் பேருந்தில் அடியில் magnet ஒன்றை ஃபிக்ஸ் செய்து வாரம்  ஒரு முறை சாலையில் ஒட்டி செல்வோம், ஆணி போன்ற இரும்பு பொருட்கள் அதில் ஒட்டி கொழும் அதை எடைக்கி போட்டு அருகில் உள்ள அனாதை இல்லத்தில் கொடுத்து விடுவோம்...நீ இயற்பியல் book வைத்திருப்பதால் இதை சொனேன்" என்று சொல்லி மெலிதாய் சிரித்தார்.
நல்ல அரசு வேலை செஞ்சிருகிங்க இப்போ ஏன் retirement Ku அப்ரம் இந்த paint company la வேலை செய்ரிங்கனு கேட்டேன்.
எனக்கு ஒரு பையன் என்று ஆரம்பித்தார்...அடடா பையன் கவனிகல  விசு பட கதை போல nu மனதுக்குள் நினைத்தேன்.
தொண்டையை சரிசெய்து கொண்டு தொடர்ந்தார்"என் பையன் படிப்பில் பயங்கர சுட்டி, அவன் சிறப்பாக படித்து ஐஐடி சீட் கிடைத்தது. அவனது கிளாஸில் அவனை எல்லாரும் maths tiger from South India என்று அழைப்பார்கள் அவனுக்கு maths um physics um மிகவும் பிடித்த பாடங்கள். அவன் ராகுல் காந்தி செட். கல்லூரி முடித்த கையோடு அவனுக்கு அமெரிக்கா வில் மேல் படிப்பு படிப்பதற்காக அழைப்பு வந்தது. கல்லூரி நண்பர்களோடு கடைசியாக ஒரு முறை கோவா சென்று வரென் என்று சொல்லி சென்றான் அங்கு அலை அடித்து பாறையில் விழுந்து அவன் பின் மண்டையில் பலமான அடிபட்டது
6 மாதம் சுய நினைவின்றி இருந்தான் .பிறகு மெல்ல மெல்ல அவனுக்கு குணமானது .இருந்தாலும் அவனால் முன் போல் கணிதம் பொட இயவில்லை. பேச்சும் சரியாக வருவதில்லை. அவனுக்கு வைத்தியம் பார்த்து இருந்த பணம் எல்லாம் செலவானது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் முழுதாக குணமாக வில்லை. என்றார் கனத்த குரலில். 
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம். Conductor nan இறங்கும் இடத்தை சொல்லி விசில் அடித்தார்.
வேறு ஏதும் சொல்லாமல் தாத்தா நான் இறங்கனம் என்று சொல்லி எழுந்த்ந்தேன்.
சரி என்று கூறி வழி விட்டுத் தூரத்தில் இருந்த எதையோ உற்று நோக்கி சிந்தனையில் ஆழ்ந்தார்.
அதற்கு பிறகு தாத்தா வை சில முறை பார்த்திருக்கிறேன் பேச வில்லை.
கல்லூரிக்கு வெற ஊருக்கு சென்றதில் எங்கோ தொலைந்து போனார் அந்த தாத்தா பிறகு கண்ணில் பட வே இல்லை.
சம்பிதில் ஜெயகாந்தன் அவர்களின் உரை ஒன்றை பார்த்தேன்...ஏனோ அவரை உருவத்தில் ஒத்து இருந்த தாத்தா மனதிற்குள் வந்தார் .... சில நேரங்களில் சில மனிதர்கள்.



Monday, 23 July 2018

what's up


Whats app
Anand halted near the tea stall in one of the small street of Tnagar area for smoke.  He worked in a small budding IT firm in Tnagar. It was his usual routine to stop by this tea stall and have a smoke before he leaves home. That day the shop was deserted with very few customers which was very rare for a busy place like tnagar. Anand lighted his cigarette went near the nearby wall and leaned on it. While the puff of smoke warmed his throat he found the strange thing on the ground, it was a cell phone.
Anand took it and found it to be costly one and waited if anyone comes searching for it. He thought of asking people nearby but hesitated. If someone misses it, they will surely call then we can hand over it to them – he said to himself.
But no one called for the next two days. His desire to have the cell phone for himself started to increase. That Sunday night he finally took out the sim card from his phone and inserted it on the new one. He broke the phones password as told by his techy friend, to whom he shared how he got a new phone. After gaining access to the phone he called his wife, who has been to her native with children for vacation. 
Lying in his bed- alone in the home, he scanned the apps in the mobile. He entered music player, played the tracks in it. All tracks were some kind of strange music –someone screaming while on the background some animal eating flesh sound was heard. He closed it and entered his most favourite messenger app “whats app” simultaneously switching on mobile internet.
Some of the contacts already saved in the mobile were also found on the whats app contact list. He casually surfed for the status of the people in the list. One status got his attention, a name ‘Maya’ with a devil emoticon as profile picture had a status “You gonna die in few minutes”.  Before the awkwardness feeling about the status began to dim, the status changed to “typing…”. Some sudden thrill engrossed him since he never knew who Maya was, why and what she might be typing to him.
“You were seeing my status” the msg came.
“Sorry do I know u?” he asked.
“Its my mobile you are holding now” a sudden chill went through his spine. His logical mind said- all costly mobile has a mobile tracker which sends a mail to the owner  about the new number when sim cards are changed.
“I am really sorry, I waited for 2 days but no one contacted it.”he justified.” I will hand over it you” .
“I don’t want the mobile now” came the reply.
“Then what else …” he probed perplexed by the reply.
“I want you die”. His guilty feeling of stealing the phone transformed into disgust and fear, fuelled  by his lonely house.
“What? “ he typed.
“Do u like to die where you are? –I mean in your bed?” ignoring his message came the reply.
Anand’s fear raised, he sensed someone is stalking him. He checked the clock it was 10 pm, all his gates were locked, the only room which had lights on was his bedroom, where he was lying.
He quickly switched off the light, closed his windows after carefully examining his deserted Dead End Street, came to bed.
Lying on his stomach in the bed, he checked his mobile for new messages, with the room filled by the mobile display light alone. There was one message from Maya, he opened it frenzied.
“You think the windows can shield you”
He turned the display towards his bed in fear, and suddenly a flash a came from his rear end of the mobile. A picture was clicked and it was sent to Maya in whats app. Anand was not able to understand what was going on, he found the photo of him uploading . He attempted to stop it by switching of the mobile internet, but he was not able to disconnect. He thought of all possible logical reasons, and finally came out with most plausible one,that his techhy friend could have hacked his mobile and playing prank with him. Though some logic was missing, he believed it was him for the sake of relieving his fear.
“Hey buddy wats up” he sent, thinking he may get some clue if it’s his friend .
“Its me” a normal reply compared to the crazy earlier messages he thought.
“No its sky” he attempted a old joke.
Casually he checked the photo that was sent, he saw himself with a fearful face glaring the bright flash. Some thing in the photo  seemed strange. He zoomed the photo’s right upper corner carefully examining it, the screened loft which was above his bed’s end was seen semi dark due to less flashlight reaching it. And on the right top corner was some finger poking through the screen. Anand felt a sudden surge of adrenaline, he turned towards his loft in panic and suddenly the figure hiding on the loft pounced on him.   
The room was filled with sound that imitated the screaming sounds found in the mobile.

Saturday, 26 August 2017

All u zombies

Suresh and Priyank was getting ready for the task to be completed. Priyank who was infamous for his mischievousness and pranks made a bet with his friends last Sunday that he would visit the building at midnight.

There was a rumour that zombies of animals​ used to be there, in the industry situated in the outskirts of city. The industry was a government defense building doing research in biological warfare in past. Later the building was deserted for anonymous reasons. It was rumoured that zombie animals transferred the zombie virus to humans, so they killed it all. Some said there was researcher who want to test the same on human prisoners and was not given permission by government so he discreetly tried it on humans without permission which led it to its shutdown. Some said it was haunted and so it went.

Suresh who was bit adventurous also thought it as fun to go,said he would accompany him to the task. They both rode there in bike and jumped into the industry. They sneaked into the building and took selfies and was thrilled about the experience. They started exploring the building most of the machines and equipments were removed and only rubbles were found. They moved with the light from the mobile. At one point they saw a door with danger symbol and admission restricted. Slowly they opened it and found another one and there was a board on it too. They couldn't interpret what does the board is about. Slowly Priyank understood it was brailey letters and the board was for blind people. While Suresh was taking selfies Priyank used his skill to read the board as he learnt brailey in past for teaching the blind.
He read out loud by slowly moving his friends finger along the board
" Do not touch this board is coated with zombie virus" when he ended the last letter his finger was pierced by the sharp edge of the letter.
Suresh who was listening without much  interest turned and looked at Priyank at the end of the sentence. He was not there. He searched for him with the mobile flash light. Suddenly he felt someone grabbing his feet, he thought Priyank is pranking him till he saw priyanks eyes.

Sunday, 17 February 2013

நடு நிசி நாய்


நடு நிசி நாய்

“இப்பலாம் நைட்ல சரியா தூக்கம் வர மாட்டேனுது டா; எதுலயும் பெருசா இன்டிரஸ்டும் இருக்க மாடேனுது” என்று தனது ஆபிசில் வேலை செய்யும் நண்பன் சுரேஷிடம் புலம்பினான் கார்த்திக்.

கார்த்திக் தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்து வேலை செய்து கொண்டிருக்கும் என்ஜினியர். நண்பர்களுடன் தங்கினால் தனக்கு பிரைவசி இருக்காது என்பதால் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருந்தான். ஊரில் இருந்த கார்த்திக் தனது அண்ணனின் கல்யாணத்துக்கு பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்து 2 வருடம் ஆகிறது. வேலை கிடைத்த நாள் முதலாய் அவனது அம்மா அவனை கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டு கொண்டிருந்தாள். ஆனால் கார்த்திக் தனது அண்ணன் கல்யாணத்திற்க்கு பிறகு வாழும் வாழ்கையை பார்த்ததில் இருந்து கல்யாணத்தின் மேல் அவனுக்கு ஒரு வித பயம் உருவாயிற்று. மனைவி, குழந்தை, பால் பாக்கெட், சொந்தங்களின் தொல்லை இதலாம் பார்த்த போது, பொருப்புகள் பிடிக்காத கார்த்திக்கு, கல்யாணம் ஒரு சுதந்திரத்தை பறிக்கும் விஷயமாகேவே தெரிந்தது.


“வேற ஒன்னும் இல்ல கார்த்தி எல்லாம் ஸ்ட்ரெஸ், அதுவும் நீ தனியா வேற இருக்கல அதான், பேசாம கல்யாணம் பண்ணிடு” என்றான் சுரேஷ்.

“வீட்ல அம்மா தொல்லை தாங்களனா நீ வேற ஏன்டா, வேற ஏதும் வழி இருந்தா சொல்லு”

யு நீட் கம்பெனி, ஹ்ம்ம் நீ ஏன் பெட் வளக்க கூடாது, இட் வில் ரீலிவ் யூவர் ஸ்ட்ரெஸ் டா... நாய் வள.. இட் வில் ஷோ மோர் லவ்”

அப்படின்ற்ற.. சேரி என்ன நாய் டா வாங்கலாம்”
“PUG வாங்கு மச்சி። அதான் டா ஹட்ச் டாக்; அது ரொம்ப கியுட், ஃபரீன்ட்லியானது, ரொம்ப பாசமா இருக்கும். என்று தனது நீண்ட நாள் pug வளக்கும் ஆசையை கார்த்திக்கிடம் தினித்தான் சுரேஷ்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த வார இறுதியில் கார்த்திக்கும் சுரேஷும் சென்று நாய் வாங்கினர், ப்ருனோ என்று பெயரிட்டனர்.

“என்னடா இந்த நாய்க்கு போய் ₹20,000 சொல்றாணுங்க”.

“இதுக்கெலாம் யோசிக்க கூடாது மச்சி, அது உன் ஸ்ட்ரெஸ்ஸ எவ்ளோ ரிலீவ் பன்னுதினு பாருடா, ஸ்ட்ரெஸ்னால என்னன பிரச்சனைளாம், வரும் தெரியுமா...” என்று சுரேஷ் தனக்கு தெரிந்த எல்லா மருத்துவ பிரச்சனையையும் சொன்னான். 

கார்த்திக் ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.

வாரம் 1:

சுரேஷின் செல்பேசி அலறியது.

“டே அது என்னடா சத்தம் போட்டுடே இருக்கு. பிஸ்கட், சாப்பாடு.. எதுவும் சாப்பட மாட்டேனுது” என்றான் கார்த்திக்

“கார்த்திக் அது குட்டி டா ஃபர்ஸ்ட் கொஞ்ச நாள் பால் தான்...ஒரு ஃபீடிங் பாட்டிலும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்ட்டவும் வாங்கிக்கோ கொஞ்ச நாளிக்கி பால் காய்ச்சி ஊத்து“

“இது வேறயா ஹ்ம்ம் ”

ஃபர்ஸ்ட் அப்படி தான் டா இருக்கும் ...அப்புறம் கொஞ்ச நாள்ள எல்லாம் செரி ஆயிடும்” என்று கீதாசாரம் சொன்னான் சுரேஷ்.

கடந்த இரண்டு நாட்களாய் கார்த்திக்கின் செல்பேசி வழக்கத்துக்கு மாறாக அரை மணி நேரம் முன்பே அலாரம் அலற ஆரம்பித்தது.

பால் வாங்கி காய்ச்சி ஊற்றி விட்டு ஆபிஸுக்கு அவசரமாய் கிளம்பி கொண்டிருந்தான் கார்த்திக். எப்போழுதும் போல் அவனது அறையில் இறைந்து கிடக்கும் சட்டையில் ஒன்றை தேடினான். அதை அயன் செய்ய எடுத்த பொது அது ஈரமாக இருந்தது.

ஆபிஸில்....

“எனக்கும் நாய்க்கும் செட் ஆகாது டா” என்றான் கார்த்திக்.

“ஏன்டா? என்னாச்சு?” என்று அக்கறையுடன் கேட்டான் சுரேஷ்.

“அவசரமா கிளம்புரதுக்காக சட்டைய எடுத்தா அதுல நாய் அசிங்கம் பண்ணி வச்சிருக்கு டா”

“நீ ஏன் மச்சி சட்டைய கண்ட இடத்துல போடுற”

“டே கடந்த 25 வருஷமா அப்படி தான்டா இருக்கேன்” என்று எகிறினான் கார்த்திக்.

“நாய காலையில வெளிய வாக்கிங் கூட்டிட்டு போடா, ஒரு மாசம் அப்படி பழகிட்டா அப்புறம் அது வீட்டுகுள்ள அசிங்கம் பண்ணாது...உனக்கும் ஒரு exercise மாதிரி இருக்கும்.”

அடுத்த நாள் காலை ப்ருனோவை கூட்டிகொண்டு வாக்கிங் கிளம்பினான் கார்த்திக். அவன் தெருவில் அத்தனை நாய்கள் இருக்கின்றன என்பது அன்றைக்கு தான் அவனுக்கு தெரிந்தது. அனைத்தும் அவனுடன் சென்ற ப்ருனோவை பார்த்து குலைத்தன, துரத்தின. தனது வேகத்துக்கு ஈடு கொடுக்க இயலாத ப்ருனோவை தூக்கி கொண்டு ஓடி வந்தான் கார்த்திக். அன்றைய தினம் வாக்கிங் ரன்னிங்காய் மாறி இனிதே முடிந்தது.

அடுத்த நாள் கையில் கம்புடன் கிளம்பினான், ஏறக்குறைய எல்லா நாய் களையும் தன் ஜென்ம எதிரியை போல் பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.

ஆபிஸில்....

“கார்த்தி இப்பலாம் உங்க எரியால அடிக்கடி திருட்டு போகுதுன்னு நியூஸ் பேப்பரில வருது....ஜாக்கரதயா இரு டா” என்றான் சுரேஷ்

“என் கிட்ட தூக்கிட்டு போக என்ன இருக்கு ..”

“அதான் நாய் வளக்கிறியே...மச்சி።።።, அது 2௦௦௦0 ரூபாய் மறந்துட்டியா።።..நாய் திருடரதுக்குனே தனி கும்பல் இருக்குடா...ஆமாம்... ஆபிசிக்கு வரும் பொது நாய எங்க விடுற?”

“அத சும்மா வரண்டால கட்டி போட்ருவேன்... இப்ப தான வாக்கிங் ஆரமிச்சிருகேன். கொஞ்ச நாளுக்கு ட்ரைன் ஆன அப்புறம் உள்ள கட்டி போடலாம்னு....பக்கத்து வீட்டு பசங்களும் விளையாடு வாங்க டா”

“என்னடா இப்படி சொல்ற...யாராவது அத தூக்கிட்டு போய்ட்டா ..”

அன்று முதல், எப்பொழுதும் சத்தமிடும் தனது ப்ருனோ கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தால் கூட வெளிய சென்று நாய் இருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக்.

நாய்க்கு காவல் இருந்தான். 

இரவில் பக்கத்து வீட்டு கேட்டை யாரேனும் திறந்தாலும் கூட, தூங்கி கொண்டிருந்த கார்த்திக் முழிக்கும் நிலைமை ஆயிற்று. ஒரு வாரதுக்கு பிறகு, இரைந்த துணிகளை அடுக்கி விட்டு ப்ருனோவை வீட்டுக்குள் கட்ட ஆரம்பித்தான்.

ஆபிஸில்....

“நாய் வளக்கிறது ரொம்ப கஷ்டம் டா..” என்றான் கார்த்திக் சுரேஷிடம்.

“ஏன்டா இதுக்கே அழுத்துக்கிற....இன்னும் மாசம் மாசம் vaccination பண்ணணும்.இன்னும் எவ்ளவோ இருக்கு...” என்று வெறுப்பு ஏற்றும் விதமாக சொன்னான் சுரேஷ்.

“நீ சொன்னனு நாய் வாங்குன பாரு என்ன சொல்லணும்...பேசாம நாய வித்ரலாமுனு இருக்கேன்”

“அந்த நாய் அவ்ளோ சீக்ரம் வேற யாருடையும் பழகாதே. அதுக்கு ஒரு மாஸ்டர் தான் டா...”’

“இல்ல மச்சி செட் ஆகாது “

“என்னமோ போ.. அது அங்க போய் சாப்படாம சாக போது...சொல்றத சொல்லிட்டேன்..”

“வேற என்னடா பண்ண சொல்ற”

“பேசாம நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ፣ வர பொண்ணு உன்னையும் உன் நாய் போல பாத்துபா።።። ஐ மீன் நாயையும் உன்ன போல பாத்துபா” என்று எப்போழுதும் போல் குழப்பத்தில் இருந்த கார்த்திகை கலாய்த்து விட்டு சீரியஸ் ஆக அறிவுரை கூறினான் சுரேஷ்.


மூன்று மாதத்திற்கு பிறகு...

“சுரேஷ்..என்ன சொன்னாலும் எதாவது சொல்லி சத்தம் போட்டுகிட்டே இருக்கா டா...என்ன பண்றதுனே தெரில” என்று செல்பேசியில் புலம்பினான் கார்த்திக்.

ஃபர்ஸ்ட் அப்படி தான் டா இருக்கும் ...அப்புறம் கொஞ்ச நாள்ள எல்லாம் செரி ஆயிடும்” என்று சுரேஷ் சொல்வதை கேட்டுகொண்டிருந்த கார்த்திக்கின் காலை ப்ருனோ நக்கி கொண்டிருந்தது.

Tuesday, 29 January 2013

DNA


DNA

நேரம்: காலை 6
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த நகரத்தின் புறநகரில் இருந்தது அந்த லேப். ஐம்பது வயதுக்கும் மேலான அந்த பேராசியர், தனது கணினியில் எதையோ கவனத்துடன் படித்து கொண்டிருந்தார். அது ஒரு DNAவை பற்றிய ஏதோ ஒரு தொகுப்பு. அதை படித்து முடித்த பின் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. தன் கண்டுபிடிப்பு உலகில் ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்த போகிறது என்பதின் அறிகுறியாய் அது வெளிப்பட்டது.

ஆம்! பேராசியர் மணிகண்டன் கண்டுபிடித்து அத்தகைய சாதனையே, அவர் கண்டுபிடித்து இது தான், விதி என்பது வேறு ஒன்றும் இல்லை அது உனது DNA தான். எல்லாம் விதி படி அதாவது உனது DNA வின் படி தான் நடக்கும். உன் பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லாமே உனது DNA வில் ஏற்கனவே பதிவாகி இருகின்றது. நீ தீர்மானிக்கும் ஒவ்வொன்றும் ஏற்கனவே தீர்மானிக்க பட்டுவிட்டன. நீ வெறும் கருவியே, கருவில் பதிவான பதிவுகளை செயல்முறை படுத்தும் கருவி.
மணிகண்டன் அந்த பதிவுகளை படிக்கும் அறிவியலை கண்டறிந்து விட்டார், இது நிருபிக்க பட்டாள் குற்றவாளிகளை பிடிப்பது மிக சுலபகாமி விடும்.

தன் கண்டுபிடிப்பை தனுக்கு உதவியாய் இருக்கும் மாணவனை தவிர வேற யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை அவருக்கு. கனவு உலகத்தில் வாழ்பவர் என்று உலகத்தால் கை விட பட்டவர் அவர். ஆனால் அறிவியலில் மிகுந்த ஈடுபாடுடைய மாணவன் ராம் மட்டும் இவரின் தனித்துவத்தை அறிந்திருதான். அதனால் இவருடன் பணிபுரிவது அவனுக்கு இயல்பாகவே பிடித்திருந்தது.

முதலாவதாக தனது நகத்தில் இருக்கும் DNAவை படிக்கச் முற்பட்டார் மணிகண்டன், அவரது கண்டுபிடிப்புக்குள் வைத்தார்  சிறிது நேரத்தில் ஒரு புதிய புதினம்(novel) போல் தனது கணினியில்தெரிந்தது அவரது வாழ்கை. அதை படித்தார் தான் கடந்து வந்த பாதையை அப்படியே பளிச்சிட்டது அது. எதையோ தேடியவர் தனது இறப்பு தினத்தை தேட கடைசி பக்கம் போனார். ஏனோ மனம் விரும்பாமல் அதை அப்படியே மூடினார்.
தனது மாணவனுக்கு செல்பேசியில் அழைத்து தனது வெற்றியையும் கூடவே அவன் நன்கு அறிந்த மனிதர்கள் நான்கு பேரின் முடியை ஆய்வுக்காக எடுத்து வர சொன்னார்.

மதியம்: 12
மாணவன் கொண்டு வந்த முடியை சோதித்து அவர்கள் வாழ்விற்கும் DNAவில் தோன்றும் பதிவிற்கும் உள்ள ஒற்றுமையை அறிந்தார். பின் அவர்கள் இன்று என்ன செய்யபோகிறார்கள் என்பதை அந்த பதிவில்  சொல்ல பட்டதை போல நடகின்றதா என்று தன் மாணவனுடன் சென்று பார்த்தார். அதில் உள்ள அனைத்தும் சிறு பிழை இன்றி நடந்தது.பேராசிரியருக்கும் மாணவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி, ஆயினும் இதை இன்னும் உறுதி படுத்தி கொள்ள விரும்பினர்.
பேராசியரின் சொல் படி அருகில் உள்ள முடிதிருத்தகம் சென்று யாரோ பத்து பேருடைய முடியை ௭டுத்து வர சென்றான் ராம். பத்து முடியும் வெவ்வேறு மனிதர்களுடையது என்பதை உறுதி செய்து கொண்டு கிளம்பினான். அப்பொழுது அவனுடைய முடி ஒன்று அவன் அறியாமல் அதற்குள் விழுந்தது.

மாலை: 6
ராம் கொண்டு வந்த அனைத்தையும் சோதிப்பதற்காக ஒவ்வொன்றாக எடுத்து அந்த கண்டுபிடிப்பில் வைத்தார். சிறிது நேரத்தில் ஒவ்வொன்றும் புதிய புதினம் போல் தெரிந்தது கணினி திரையில். பிறகு ஒவ்வொன்றாக படிக்கச் ஆரம்பித்தார். எல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்கையில் நடக்கும் காதல், கோவம், ஏமாற்றம், அப்படியாக எதையோ கொண்டிருந்தது...எல்லாருடைய வாழ்கையிலும் நிகழ் காலமான இன்று என்ன செய்ய போகிறார்கள் என்பதை தேடி கொண்டிருந்தார் பேராசிரியர். அவர் படித்த முதல் நான்கு மனிதர்களின் DNAவும் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் அன்றாடம் மனிதர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவமாகவே இருந்தன.

ஆய்வின ஐந்தாவது நபரை படிக்கச் ஆரம்பித்தார் பெரிய அந்த புதினத்தில், எப்படியோ அன்றைய தினத்தின் பக்கத்தை கண்டறிந்தார். எல்லாரும் போல இதுவும் ஒன்று என்று சலிபுடுன் படித்து கொண்டிருந்தவரை திடீர் என சில வார்த்தைகள் திடுக்கிட வைத்தன. சுதாரித்து கொண்டு மறுபடியும் அதை கவனத்துடன் படிக்கச் ஆரம்பித்தார்...
“இவன் பெரிய திட்டம் ஒன்று உடையவன், இன்று 29/01/2013 அன்று மாலை 7 மணிக்கு DNA வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கும் பேராசியர் ஒருவரை கொலை செய்வான்” என்று இருந்தது.

திடுக்கிட்ட பேராசியரின் கை இடறி கணினியில் அவரின் வாழ்கை பதிவு திறந்தது. தன் முடிவை அறிய இறுதி பக்கத்திற்கு சென்றுவிட்டு, படிக்கும் முன் கடிகாரத்தை பார்த்தார் நேரம் 06:59ஐ காட்டியது. ஏதோ சத்தம் கேட்டு பதற்றத்துடன் திரும்பிய பேராசிரியரின் நெத்தியில் பாய்ந்தது குண்டு. கணினியில் தெறித்த உதிரம் வைத்தது அவரது வாழ்கையின் இறுதி பக்கத்தில் முற்று புள்ளி.